நிலக்கோட்டையில் நடந்த ‘கிடா முட்டு’ போட்டி - பரிசுகளை அள்ளிச் சென்ற கிடா உரிமையாளர்கள்! - கிடா சண்டை வீடியோ
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே முதல்முறையாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிடா முட்டு போட்டி இன்று (18.03.2023) நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கிடாய்கள் கலந்து கொண்டன.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த, அம்மையநாயக்கனூரில், பாரம்பரிய வீர விளையாட்டு ஆர்வளர்கள் மற்றும் கிடா வளர்ப்போரின் தீவிர முயற்சியால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கிடா முட்டு போட்டி, உரிய அனுமதியுடன் முதல்முறையாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை,நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 106 கிடாய்கள் அதாவது 53 ஜோடி கிடாய்கள் கலந்து கொண்டன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கிடா முட்டு போட்டி, சேவல் சண்டை என பல்வேறு விளையாட்டுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இன்று அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற கிடா முட்டு போட்டி, இப்பகுதியில் காவல் துறையினரின் உரிய அனுமதியுடன், வருவாய்துறையினரின் நேரடி பார்வையில், கால்நடைத்துறை மருத்துவ குளுவினரால் கிடாய்களின் உடல் நலம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கபட்டு நடந்து வருகின்றனது.
போட்டியில் 6 மற்றும் 8 கிடா பல் என இரண்டு வகைகளாக கிடாய்கள் பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒருமுறை ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் கிடா, மீண்டும் அடுத்தடுத்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. வேற போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றாலும் கூட குறைந்தபட்சம் 4 மாதங்கள் இடைவெளிக்கு பின்னர், மீண்டும் 20 முதல் 30 நாட்கள் பயிற்சி அளித்த பிறகே அடுத்த போட்டியில் அனுமதிக்கின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் 60 முட்டுக்கள் தொடர்ந்து முட்டும் கிடாய்கள் வெற்றிபெற்றதாகவும், அதில் சோர்வடைந்து பின்வாங்கும் கிடாய்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் 10 - முட்டுகளிலே பெரும்பாலான கிடாய்கள் பின்வாங்கி போட்டிகள் முடிவுக்கு வருகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மதியம் 12 மணிவரை மட்டுமே நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறும் கிடாக்களுக்கு, சைக்கிள், கட்டில், டேபிள், நாற்காலி, கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் ஒரு ஜோடி கிடா ஒரு ரவுண்டு மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
கிடா முட்டு போட்டி ஏற்பாடுகளை, இப்பகுதி தமிழ் ஆர்வளர்கள் மற்றும் கிடா வளர்ப்போர்களான எஸ்.எம். பாண்டி, சௌகத் அலி, திண்டுக்கல் சிட்டி அப்பு, பாளையம்பட்டி ஜமீன் ஆல்வின் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தருமபுரி: மின் ஒயரில் சிக்கி யானை உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் காட்சி!