தமிழ் பாட்டுக்கு யூனிபார்மில் டான்ஸ் ஆடிய கேரளா போலீஸ் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ! - kerala police dance video
🎬 Watch Now: Feature Video
இடுக்கி : கோயில் திருவிழாவில் கரகாட்டக்காரன் படத்தில் வரும் "மாரியம்மா மாரியம்மா" பாடலுக்கு உதவி காவல் ஆய்வாளர் மெய் மறந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி அடுத்து பூப்பாரா கிராமம் அமைந்து உள்ளது.
தமிழக - கேரள எல்லையான பூபாராவில் மாரியம்மன் கோயில் அமைந்து உள்ளது. அந்த கோயிலில் நேற்று பங்குனி உத்திரம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அண்டை கிராமங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்து திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், திருவிழா பாதுகாப்பு பணியில் சாந்தன்பூரா உதவி காவல் ஆய்வாளர் ஷாஜி தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். அப்போது கோயில் திருவிழாவை முன்னிட்டு நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற "மாரியம்மா மாரியம்மா" பாடல் ஒலிபரப்பப்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளர் ஷாஜி திடீரென பாடலுக்கு நடனமாடத் தொடங்கினார். ஷாஜி நடனமாடுவதை அருகில் நின்று மற்ற காவலர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். இதையடுத்து கிராம மக்கள் வந்து ஷாஜியை சாந்தப்படுத்தி அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த கேரள காவல் துறை உயரதிகாரிகள், துணை காவல் ஆய்வாளர் ஷாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளனர். கோயில் திருவிழாவில் துணை காவல் ஆய்வாளர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.