கடலுக்குள் சென்று மீனவருடன் கலந்துரையாடிய எம்.பி., கனிமொழி - தூத்துக்குடி சுனாமி காலணி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15726632-thumbnail-3x2-dds.jpg)
தூத்துக்குடி சுனாமி காலணி பகுதியை சேர்ந்தவர் மலைசாமி மகன் சக்திவேல் (31). பி.ஏ பட்டதாரி படிப்பு முடித்துவிட்டு மீன்பிடி தொழில் மற்றும் மீன் சம்பந்தபட்ட யூடியூப் சேனல் நடத்தி சம்பாதித்து வருகிறார். இதை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரை நேரில் சந்தித்து கடலுக்குள் 3 மைல் தூரம் 2 மணிநேரம் பயணம் செய்து இட்லி, மீன் பொறியல், நண்டு இறால் சமைத்து படகில் சாப்பிட்டுள்ளார். மேலும், இப்பயணம் நன்றாக இருந்ததாகவும் சக்திவேலை அவர் பாராட்டியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST