1000 முத்தங்களால் வரையப்பட்ட கமல் ஓவியம்....! - coimbatore news
🎬 Watch Now: Feature Video
Published : Oct 30, 2023, 2:31 PM IST
கோயம்புத்தூர்: கோவையை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான ராஜா கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு முத்தங்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. தங்க நகை வடிவமைப்பாளராக உள்ளர். இவர் நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பரிசளிக்கும் வகையில் 1000 முத்தங்களால் அவரது ஓவியத்தை உருவாக்கி அசத்தி உள்ளார்.
இது குறித்து ராஜா கூறுகையில், ”சுமார் 8 மணி நேரம் செலவளித்து இதனை உருவாக்கி இருப்பதாகவும், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலஹாசனின் பிறந்தநாளில் அவரை சந்தித்து இதனை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். கமலஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி" என்ற திரைப்படத்தை பார்த்த பிறகு தனக்கு நம்பிக்கை கிடைத்தாகவும் அதனால் தன்னுடைய பெயருக்கு முன்னால் UMT என்று சேர்த்து UMT ராஜா என்று தன்னுடைய பெயரை மாற்றி கையில் பச்சையும் குத்தியுள்தாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 177 படைப்புகளை ஓவியமாக வரைந்துள்ளேன், சமீபத்தில் கமல் ஹாசன் ஓவியத்தை நீரில் இயற்கையாக உருவான பாசியை கொண்டு தத்ரூபமாக வரந்து அதற்கு ’பாசமிகு தலைவா’ என பெயர் வைத்தேன்.கமல்ஹாசன் பிறந்த நாளன்று அவரை சந்தித்து நான் வரைந்த ஓவியத்தைப் பரிசளிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது”என தெரிவித்தார்.