பட்டியலினத்தவர் என்றால் இப்படி செய்வீர்களா? - ஊராட்சி துணைத் தலைவர் குற்றச்சாட்டு - காலங்கரைப்பட்டி தூத்துக்குடி
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காலங்கரைப்பட்டி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த சுந்தரலட்சுமி என்பவரும், காலங்கரைப்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவராக கனகலட்சுமி என்பவரும் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒராண்டுக்கு மேலாக ஊராட்சி மன்றத் தலைவர் கனகலட்சுமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைத்ததாகவும், இதன் காரணமாக தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மே 31 அன்று ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்தபோது தனக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலி இருக்கை சேதப்படுத்தி இருந்ததாகவும், இதனை வேண்டுமென்றே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் லட்சுமண பெருமாள் செய்ததாகவும், தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி துணைத் தலைவர் சுந்தரலட்சுமி, தலைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும், தனக்கான இருக்கை வரும் வரை அனைத்து கூட்டத்திலும், தான் கீழே அமர்ந்து பங்கேற்க உள்ளதாகவும், அவர் தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.