சென்னை திருமங்கலம் சிக்னலில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்.. காவல் துறை பதில் என்ன? - Jai sri ram
🎬 Watch Now: Feature Video
சென்னை திருமங்கலம் சிக்னல் பகுதியில் விஎம்எஸ் போர்டு ஒன்றில் நேற்று இரவு ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டிருந்தது. இது அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக இது போன்ற விளம்பரப் பலகைகளில் விளம்பரங்கள் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த நிலையில், இது போன்று வாசகம் வெளியானதை வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு சென்னை காவல் துறையிடம் முறையிட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த சென்னை காவல்துறை உடனடியாக விளம்பரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது போன்ற விஎம்எஸ் போர்டுகள் தனியாரால் வைக்கப்படுவது எனவும், குறிப்பாக விளம்பரங்களுக்காகவும், சமூக அக்கறை உள்ள கருத்துக்களை பதிவிடவும் போக்குவரத்து விழிப்புணர்வு செய்திகளை ஒளிபரப்பவே வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை காவல் துறை தொடர்புடைய விஎம்எஸ் போர்டுகளில் வாசகங்கள் மற்றும் விளம்பரங்கள் வெளியிடப்படுவதை ஆய்வு செய்துதான் வெளியிடுவோம் எனவும், இது தொழில்நுட்ப ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ளதால் மூன்றாம் நபர்கள் தவறாக கையாள முடியாது எனவும் காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.