ஈரோட்டில் கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி.. பாதுகாப்பு கேட்டு எஸ்பி ஆபிஸில் தஞ்சம்! - fear
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 10:09 PM IST
ஈரோடு: காதலித்துக் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தம்பதியினர் புகார் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில், பி.ஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் தர்மபுரியைச் சேர்ந்த மாதவன் என்பவரும், அதே கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஹரிதர்ஷினி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரிய வந்த நிலையில், இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மேட்டூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர்.
இதனை அறிந்த பெண்ணின் தந்தை நீதிமோகன், இனி எப்படி இருவரும் வாழ்கிறீர்கள் எனப் பார்ப்பதாகக் கூறி, இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் உயிர்பயத்தில் மாதவன் - ஹரிதர்ஷினி தம்பதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து, தங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.