ETV Bharat / state

பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வு வேண்டாம்...வேறு தேதியில் நடத்த தமிழக அரசு கோரிக்கை! - UGC NET EXAM

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை, யுசிஜி நெட் தேர்வை பொங்கல் நாளன்று நடத்தப்படுவதை மாற்றியமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம்.

யுசிஜி நெட் தேர்வு எழுதும் மாணவர்கள்(கோப்புப்படம்)
யுசிஜி நெட் தேர்வு எழுதும் மாணவர்கள்(கோப்புப்படம்) (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2024, 7:32 PM IST

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) யுசிஜி நெட் தேர்வை பொங்கல் நாளன்று நடத்தப்படுவதை மாற்றியமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் எழுதி உள்ள கடிதத்தில், "மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) அதன் யுசிஜி நெட் தேர்வை 2025 ஜனவரி 3 ந் தேதி முதல் 16 ந் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் சமுதாய மக்களாலும் பொங்கல் திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு , 13 ஆம் தேதி போகி பண்டிகையும், 14 ஆம் தேதி பொங்கல் (தமிழ்ப் புத்தாண்டு) பண்டிகையும், ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாகவும் (மாட்டுப் பொங்கல்) ஜனவரி 16 ஆம் தேதி உழவர் திருநாள் அல்லது காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: "அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல" - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

இந்த விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஏற்கனவே 2025 ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் உணர்வார்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்ல, 3,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும். பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது . பொங்கல் விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும்.

மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025க்கான பட்டயக் கணக்காளர்கள் அறக்கட்டளைத் தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.