பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி - பவானிசாகர் அணை நீர்வரத்து
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் இன்று(ஜூன்.28) காலை 10 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,552 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து 82.66 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர் இருப்பு 17.13 டிஎம்சி ஆக உள்ள நிலையில் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST