தள்ளு.. தள்ளு... தள்ளு: ஸ்டார்ட் ஆகாமல் பாதியில் நின்ற காவல் வாகனம்
🎬 Watch Now: Feature Video
கோவை: மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான கரும்புக்கடை, சுந்தராபுரம், போத்தனூர் ஆகியப் பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த காவல் நிலையங்களுக்காக ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டன. அதில் சில வாகனங்கள் பல வருடங்களுக்கு முன் பயன்படுத்திய டாடா சுமோ போன்ற வாகனங்கள் ஆகும்.
இந்நிலையில் கரும்புக்கடை காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட டாடா சுமோ ரோந்து வாகனம் ஒன்று காவல் நிலையம் அருகே பழுதாகி நின்றது. பலமுறை அதனை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால் பெண் காவலர்கள் உட்பட சக காவலர்கள் சேர்ந்து தள்ளிக்கொண்டே சென்றனர்.
மேலும், காவல்துறை வாகனங்கள் பழுதாகி நின்றால் மக்களின் நிலை என்ன ஆகும்? போலீசார் ரோந்துச் செல்லும் போது எந்நேரத்தில் வேண்டுமானாலும் குற்றவாளிகளை விரட்டிச் செல்ல நேரிடும். அது போன்ற நேரங்களில் பாதியில் ரோந்து வாகனங்கள், பழுதாகி நின்றுவிட்டால் என்ன செய்வார்கள் என கேள்விகள் எழுந்து வருகிறது.
காலத்திற்கேற்ப புதிய வாகனங்களை காவல் நிலையங்களுக்கு அரசு அளித்திட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நம்முடைய அரசானது இதற்கும் தனியாக நிதி ஒதுக்கி புதிய வாகனங்களை அளிக்க வேண்டும் எனப் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போது காவலர்கள் பழுதாகி நின்ற வாகனத்தை தள்ளிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:போலி பாஸ்போர்ட் வழக்கு: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை