ETV Bharat / state

பெரியார் குறித்த அவதூறு கருத்து...சீமானை கைது செய்ய கோரி தபெதிக போராட்டம்! - SEEMAN ISSUE

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாதக சீமானை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்
நாதக சீமானை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 6:54 PM IST

கோயம்புத்தூர்: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தந்தை பெரியார் குறித்து பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, “பெரியார் கூறியதாக ஆதாரமற்ற பொய் செய்திகளை சீமான் பரப்பி வருவதாக” தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

ஆனால், பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பெரியார் பேசியதையெல்லாம் பொதுவெளியில் பேச முடியாது” எனவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, “மானமும், அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருந்தார். மேலும், பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்தை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இன்று (ஜனவரி11) சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சீமானின் பேச்சு பதட்டத்தை உருவாக்குகிறது.. உடனே நடவடிக்கை எடுங்க - கோர்ட் அதிரடி உத்தரவு..!

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள பயணியர் மாளிகை முன்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர், சீமான் படத்தை அவமதித்தனர். மேலும், சீமானின் படங்களை கிழித்தும், கால்களால் மிதித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும். அதுவரை, சீமான் செல்லும் இடங்களிலெல்லாம் போராட்டம் நடத்தப்படும் என முழக்கங்களை எழுப்பினர். இதனால், அன்னூர் பயணியர் மாளிகை முன்பாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சீமானின் கருத்துக்கு ஆதாரம் கேட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். இதனிடையே, கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 61 காவல் நிலையங்களில், பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.