திருநெல்வேலி: பொங்கல் என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது சக்கரை பொங்கல், படையல் உணவு, கரும்பு எனலாம் இந்த பட்டியலில் சிறுகிழங்குகளுக்கு தனி இடமே உள்ளது. இந்த சிறுகிழங்குகள் திருமணமான மகளுக்கு பெற்றோர்கள் வழங்கும் பொங்கல் சீரில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
பொங்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் சிறுகிழங்குகள் குறித்து திருநெல்வேலி மாவட்டம் அம்காசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்து விவசாயிகள் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசினார்கள். அப்போது பேசிய விவசாயி முகிலன், “ நான் கடந்த பல ஆண்டுகளாக சிறுகிழங்குகளை விளைவித்து வருகிறேன்.
அதிலும் பத்து ஆண்டுகளாக நான் "ஸ்ரீதாரா" புதுவகை சிறுகிழங்குகளை விளைவித்து வருகிறேன். இந்திய அளவில் அதிகபடியான சிறுகிழங்கு விளைவித்தால் எனக்கு கேரள அரசு தேசிய விருது கொடுத்தது. இந்த சிறுகிழங்குகள் பொங்கல் பண்டிகைகாகவே விளைவிக்கப்படுகிறது. இந்த கிழங்குகள் பொதுவாக 7-8 மாதங்கள் வளர்க்கூடியவை. நாற்று நடும் காலத்தையும் சேர்ந்தால், ஆண்டுக்கு ஒருமுறை தான் விளைகிறது. ஜனவரி மாதம் சரியாக பொங்கலை ஒட்டியே இந்த சிறுகிழங்குகள் அறுவடை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 15,000 முதல் 20,000 வரை செலவு செய்து விளைச்சல் செய்துள்ளோம்.
இதையும் படிங்க: 'தமிழி' எழுத்துருவில் கோலம் வரைந்து அசத்தல்: அரசு பள்ளி மாணவிகளின் கோலாகல பொங்கல்!
பொங்கல் படையலில் அனைத்து காய்கறிகளும் இருந்தாலும் இந்த சிறுகிழங்கள் மிக முக்கியமான படையல் உணவாக பார்க்கப்படுகிறது. பொங்கலின் போது ஜனவரியில் கிடைக்கும் வகையில் விளைவித்து அறுவடை செய்யப்படுவதால் எப்போது நல்ல விலையில் விற்கப்படும். ஆனால் இந்த முறை மழை போன்ற பேரிடர் வந்ததால் விளைச்சல் சரியாக இல்லை. சந்தையில் விற்றாலும் விவசாயிகளான எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. அதனால் இந்த முறை நாங்களை நேரடியாக விற்க உள்ளோம். சமீப காலமாக மக்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிறுகிழங்கு சக்கரை நோய்யை கட்டுக்குள் வைக்க உதவுவதாக கூறி அதிகபடியான மக்கள் சிறுகிழங்கை விரும்பி வாங்கி செல்கின்றனர்.” என்றார்.
இதையடுத்து பேசிய விவசாயி கனகா, “சிறுகிழங்கு பொங்கலுக்கு மிகவும் பிரசத்தி பெற்ற கிழங்கு வகையாகும். சிறுகிழங்கு இல்லாமல் பொங்கல் படையல் இருக்காது. சிறுகிழங்கை அவித்து, சமைத்து பொங்கல் அன்று மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்” என்றார்.