ரமணரின் 73-வது ஆராதனை விழா: மனமுருக பாடிய இளையராஜா! - etvbharat tamil
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ரமணரின் 73-வது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று காலை ரமணரின் சமாதிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தமிழ் பாராணயங்கள் மற்றும் வேத விற்பன்னர்களால் சிறப்பு மந்திரங்கள் சொல்லி மகா தீபா ஆராதனை நடைபெற்றது. பின்பு இசைஞானி இளையராஜா பகவான் ரமண மகரிஷியின் கீர்த்தனைகளை மனமுருகப் பக்தியுடன் பாடினார். இளையராஜாவுடன் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, ரமண ஆசிரமத்தின் நிர்வாக தலைவர் வெங்கட்ரமணன் உள்ளிட்ட பலர் இந்த ரமணர் ஆராதனையில் கலந்து கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து ரமணர் ஆராதனையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆசிரமம் சார்பாகச் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த 73 வது ரமணர் ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரமணரை வழிபட்டுச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Today Rasi Palan: இன்றைய ராசிபலன் (19.04.2023)