திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஹெவி டிராபிக் ஜாம்.. 10 கிலோ மீட்டருக்கு அணிவகுத்த வாகனங்கள்!
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் - திருக்கச்சூர் இடையே ரயில்வே கேட் ஒன்று உள்ளது. அதேபோல மறைமலைநகர் அருகே சாமியார்கேட் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் உள்ள ரயில்வே கேட்டுகள் நேற்று ( ஏப்.27 ) திடீரென பழுதாயின. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சிங்கப்பெருமாள்கோயில் ரயில்வே கேட் முன்பு இருசக்கர வானங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார், லாரி, தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் முடங்கின. இதேபோல் மறைமலைநகர் ரயில்வே கேட் முன்பும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் விளைவாகத் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த அனைத்து வாகனங்களும் மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள்கோயில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்தன. சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடித்து மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
அடிக்கடி சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவித்தனர். இன்று ஏற்பட்ட 2 மணி நேரக் கடுமையான போக்குவரத்து நெரிசலால் மறைமலைநகர், சிங்கபெருமாள்கோயில், திருத்தேரி, மகேந்திராசிட்டி என சுமார் 10 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்துக் காத்திருந்தன.
இதையும் படிங்க: போத்தனூர் ரயில் நிலையத்தின் பராமரிப்புப் பணி - ரயில் சேவைகளில் மாற்றம்!