சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி பிப்ரவரி 21ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’ஓ மை கடவுளே’ படத்திற்கு பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்திலிருந்து ‘The Rise Of Dragon’, ‘வழித்துணையே’ (Dream Song) என இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
Due to recent developments, Dragon 🐉 is now releasing on Feb 21st! ❤️🔥
— AGS Entertainment (@Ags_production) January 18, 2025
See you at the movies 🍿@pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi… pic.twitter.com/WVCZVF21D9
கல்லூரி, காதல், காமெடி என உருவாகியிருக்கும் ’டிராகன்’ திரைப்படம், இளம் ரசிகர்களை கவரும் விதமாக காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என கடந்த புதன்கிழமை (ஜன.15) அறிவிக்கப்பட்டது. அறிவித்த மூன்று நாட்களிலேயே ஜனவரி 18ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏற்கனவே அறிவித்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 21ஆம் தேதி ’டிராகன்’ திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.
ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கு காரணம் அஜித்தின் ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாவதுதான் என பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் பிரதீப், “தல வந்தா தள்ளி போய் தான ஆகணும். பிப்ரவரி 21 முதல் டிராகன்” என பதிவிட்டுள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்த அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது.
Thala vandha thalli poyi dhana aganum 😊
— Pradeep Ranganathan (@pradeeponelife) January 18, 2025
Dragon 🐉 from Feb 21 .
இதையும் படிங்க: நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர் யார்..? ரயிலில் வைத்து பிடித்த காவல்துறை
ஏற்கனவே தனுஷ் இயக்கியுள்ள ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாவதால் அத்திரைப்படமும் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, இப்போது பிப்ரவரி 21ஆம் தேதி தனுஷ் இயக்கிய ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படமும், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனால் எந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் கிடைக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.