குருப்பெயர்ச்சி : திருநெடுங்களநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் - கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுவதை முன்னிட்டு
🎬 Watch Now: Feature Video
திருச்சி: குரு பகவான் இன்று (ஏப்.14) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுவதை முன்னிட்டு ஆலயங்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயிலில் இன்று அதிகாலை நவகிரக குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சந்தனம் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி திரவிய பொடி உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள யோக தட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு பூஜையைக் கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் சோமசுந்தரம் சிவாச்சாரியார், ரவி மற்றும் ரமேஷ் சிவாச்சாரியார்கள் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST