வீடியோ: ஓசூர் அரசு மருத்துவமனையில் இருக்கைகள் இல்லை.. பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் அமரும் தாய்மார்கள்.. - அரசு மருத்துவமனையில் சிகிச்சை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 11, 2023, 5:15 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அரசு மருத்துவமனையில் தாய், சேய் வார்டில் இருக்கைகள் இல்லாமல் குழந்தையை தரையிலும், படியிலும் தூங்க வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனை கடந்தாண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது. 

இந்த மருத்துவமனையில் தினந்தோறும் சராசரியாக 20 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பாரக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்ப்பிணிகளுடன் வருபவர்களுக்காக காத்திருப்பு இருக்கைகளோ, பெண்களின் துணி உள்ளிட்டவைகளை வைப்பதற்கான எந்த வசதியில்லாமல் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் படியிலும் பொதுமக்கள் வந்து செல்லும் தரையிலும் உட்கார்ந்துள்ளனர். 

சிறு குழந்தையை பொதுமக்கள் நடந்து செல்லும் தரையில் படுக்க வைக்கும் அவல நிலை தொடர்கிறது. நோயாளிகள் வெளியே அமர்ந்து உணவு எடுத்துக்கொள்வதும், பொதுவெளியில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதுமாக இருப்பதால் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் நோயாளிகளுக்காக மட்டுமில்லாமல் நோயாளிகளுடன் வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காவும் இருக்கைகளை பொருத்தி வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. வாடகைக்கு வீடு எடுத்து போலி வீடியோ.. 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.