ஈரோடு கிழக்கை விட்டுக் கொடுத்தது ஏன்? - ஜி.கே.வாசன் விளக்கம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடைய உள்ளது. அதனை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு இந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளோம்" என்றார்.
வருகின்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்றலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.வாசன், “நம்பிக்கைதான் அரசியல், செய்தியாளர்களின் ஜோசியத்திற்கு பதில் அளிக்க முடியாது” என்றார். தொடர்ந்து, பிளவுபட்ட அதிமுக என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், “என்றைக்குமே நான் நல்லதையே நினைக்கக் கூடியவன்.
திமுக அரசு தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. பல்வேறு வரி சுமைகளால் தமிழ்நாடு மக்கள் தள்ளாடுகிறார்கள்.
திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அவநம்பிக்கை மக்களிடம் உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு அந்த கட்சிக்கு உயர்வை கொடுத்து வருகிறது” என்றார்.