Video:குரங்கு கூட்டங்களுக்கு இடையே சண்டை- வைரலாகும் வீடியோ - monkey army
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநிலம் ஹனூர் மாவட்டம் சந்தேபேட்டை தெருவில் இரு குரங்கு கூட்டங்களுக்கு இடையே சண்டை மூண்டது. புராணங்களில் கூறப்படும் அனுமான் இந்த ஹனூரில் (ஹனுமாபுரி) வாழ்ந்ததாக ஒரு கதை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான குரங்குகள் வாழ்கின்றன. மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் சொந்த படை உள்ளது. மற்ற தெருக் குரங்குகள் வந்தால், நாட்டுக் குரங்குகள் அந்த பகுதியில் அனுமதிக்காது. இந்நிலையில், அந்த நகரின் ஆஞ்சநேயா பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட குரங்கு கூட்டம், சந்தேபேட்டை தெருவை ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த குரங்குகளின் எதிரணி சண்டையிட்டது. இந்த சண்டை காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST