வீடியோ: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மினி பேருந்து.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 15 பேர்.. - ஆம்னி வேன் விபத்து
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தென்காசி வாசுதேவநல்லூரை சேர்ந்த 15 பேர் கோயில் திருவிழாவுக்காக தீர்த்தம் எடுக்க மினி பேருந்து மூலம் நெல்லை வழியாக கன்னியாகுமரி புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் ஓட்டுனர் உள்பட 15 பேர் பயணித்துள்ளனர்.
இந்த பேருந்து டக்கரம்மாள்புரம் அருகே சென்றபோது, திடீரென முன்பக்கத்தில் இருந்து கரும் புகை வெளிவந்துள்ளது. இதை சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் கணேசன் மினி பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறக்கி விட்டுள்ளார். அடுத்த சில நொடிகளில் மினி பேருந்து முழுவதும் மளமளவென தீப்பிடிக்க தொடங்கியது.
இதுகுறித்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.