இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்? - ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது என்ன?
🎬 Watch Now: Feature Video
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளேன். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம்.
முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுக்கு வெற்றியை தேடித் தரும். தொகுதியை எங்களுக்கு ஒதுக்கி தந்த திமுகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்டாயம் வர வேண்டும் என முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஏற்கனவே பரப்புரையை தொடங்கிவிட்டனர். வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன் கலந்து பேசி இருப்பார்கள் என நம்புகிறேன். காங்கிரஸ் மேலிடம் விரும்பியதால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். எதிரணியில் இருப்பவர்கள் இடைத்தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? யாரை நிறுத்துவது? என முடிவு செய்யவில்லை காரணம் அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்” என தெரிவித்தார்.