விறுவிறுப்பாக முடிந்த புளியம்பட்டி கால்நடை சந்தை.. ரூ.1.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்.
இவ்வாறு இன்று கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 100 கன்றுகள் மற்றும் 300 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இவற்றில் எருமைகள் 36 ஆயிரம் ரூபாய் வரை, ஜெர்சி மாடு 48 ஆயிரம், சிந்து மாடு 42 ஆயிரம், நாட்டு மாடு 72 ஆயிரம் ரூபாய் மற்றும் வளர்ப்பு கன்றுகள் 14 ஆயிரம் வரை விற்பனையானது.
அதேபோல 400க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 7 ஆயிரம் ரூபாய் வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் விற்பனையானது. இவ்வாறு சந்தைக்குக் கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் சந்தை தொடங்கிய 5 மணி நேரத்தில் 1.50 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.