Video:சமத்துவப் பொங்கல் விழா - குத்தாட்டம் போட்ட காவல் ஆய்வாளர்கள் - Equality Pongal researchers danced and enjoyed
🎬 Watch Now: Feature Video
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். இந்த விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு பொங்கல் திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்த விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் சிலம்பாட்டம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் இறுதியாக இசை நிகழ்ச்சி நடைபெற்றபோது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் குத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் காவலர்கள் மத்தியிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.