வனப்பகுதிக்குள் நிலவும் வறட்சி: முதுமலை சாலையில் திரியும் யானைகள்! - சாலையில் திரியும் யானைகள்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: கோடைக்காலம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், வனப் பகுதிகள் அனைத்தும் வறட்சியாகக் காணப்படுகிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு குடிநீரைத் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.குறிப்பாக யானைகள் காலை மாலை எனச் சாலையோரங்களில் உலா வந்த நிலையில் தற்போது குடிநீருக்காகப் பகல் நேரங்களில் சாலைகளைக் கடந்து குடிநீரைத் தேடிச் செல்கிறது.
இந்நிலையில், முதுமலையிலிருந்து கூடலூர், மைசூர் செல்லும் பிரதான சாலை வனப்பகுதியில் கூட்டமாக யானைகள் சாலையைக் கடந்தன யானைகள் வனப்பகுதியிலிருந்து சாலையைக் கடக்கும்போது வாகன ஓட்டிகள் இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வனப்பகுதிக்குள் இருக்கும் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகளைத் தேடி ஊர் பகுதிக்கும் சாலைகளிலும் சுற்றித் திரிகின்றன. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வனப்பகுதிக்குள் வனவிலங்குகளுக்குத் தேவையான உணவுகளை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனி அய்யம்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!