வனத்துறை ஜீப்பை தாக்க வந்த காட்டு யானை.. சாமர்த்தியமாக யானையை விரட்டிய வனக்காவலர்.. வைரல் வீடியோ! - elephant attacked the jeep
🎬 Watch Now: Feature Video
Published : Sep 17, 2023, 1:20 PM IST
ஈரோடு: தெங்குமரஹாடா சாலையில் ஜீப்பை தாக்க வந்த யானையை, வனத்துறையினர் தைரியமாக வாகனத்தை இயக்கி யானையை விரட்டி அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் உலா வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது. இந்நிலையில் பவானிசாகர், காராட்சிக்கொரை வனசோதனை சாவடியில் இருந்து தெங்குமரஹடா செல்லும் வனச்சாலையில் வனத்துறையினர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சுஜ்ஜல் குட்டை என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பிரம்மாண்ட வடிவிலான ஒற்றை ஆண் யானை திடீரென வனத்துறையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை தாக்க ஓடி வந்தது. இதைக் கண்டு சற்றும் அஞ்சாத ஜீப் ஓட்டுநர், வாகனத்தை இயக்கியதால் காட்டு யானை சற்று அஞ்சியபடி பின்னோக்கி நகர்ந்தது.
தொடர்ந்து ஹாரன் சப்தத்தை கேட்டு பயந்த யானை பின்னோக்கி நகர்ந்தது. தொடர்ந்து வனத்துறையினர் விரட்டியதால், சிறிது தூரம் ஓடி பின்னர் சாலையோர வனப்பகுதிக்குள் சென்று யானை மறைந்து கொண்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டு யானை தாக்க வந்தபோது உரிய நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஜீப்பை இயக்கிய வனக்காவலரை வனத்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.