வீட்டில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ளது. மேலும், வனப்பகுதிக்கு அருகாமையில் இருப்பதால் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூரில் ஜெயராம் என்பவர் தோட்டத்து வீட்டிற்குள் மலைப்பாம்பு இருப்பதைக் கண்டறிந்தார். உடனடியாக கோயம்புத்தூர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்பு 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பைப் பிடித்தனர். பிடிப்பட்ட அந்த மலைப்பாம்பை கெம்பனூர் வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "இதுபோன்ற மலைப்பாம்புகளும் அறிய வகை பாம்புகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவற்றைப் பிடிக்க முயற்சி செய்யக் கூடாது என்றும், விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்தாலும் தாங்களாக விரட்ட முயற்சி செய்யக்கூடாது என்றும் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றும் கூறினர்.
இதையும் படிங்க:திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்... உயிருடன் இந்திய மாணவியை புதைத்த காதலன்.. அதிர்ச்சி பின்னணி!