Leo Trailer: அஜித் படத்தைக் கொண்டு விஜய் படம் வரைந்த ஓவியர்! - ajith vijay fans
🎬 Watch Now: Feature Video
Published : Oct 5, 2023, 1:03 PM IST
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர் செல்வம், நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் வெற்றியடைய வேண்டியும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பதிலாக "விஜய் மற்றும் அஜித் இருவரும் சூப்பர் நடிகர்கள்தான்" என்று குறிக்கும் வகையில் பிரஷ்-க்கு பதிலாக அஜித் போட்டோவைக் கொண்டு விஜய் படத்தை வரைந்துள்ளார்.
மேலும் விஜய், அஜித் படம் ரிலீஸ் ஆகும்போது, அவர்களது ரசிகர்கள் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுகொள்வது வழக்கமாகி விட்டது. ஆனால் இப்போது விஜய், அஜித் நண்பர்களாகத் தானே உள்ளனர். இதை ரசிகர்கள் உணர வேண்டும். ஆகையால் அஜித் ரசிகரான ஓவியர் செல்வம், விஜய்யின் 'லியோ' திரைப்படம் வெற்றியடைய வேண்டியும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பதிலாக சூப்பர் நடிகர்கள் என்று "விஜய் - அஜித் இருவரும் சூப்பர் நடிகர்கள்தான்" என்பதை குறிக்கும் வகையில் "அஜித் போட்டோவைக் கொண்டு நீர் வண்ணத்தில் போட்டோவைத் தொட்டு 10 நிமிடங்களில் வரைந்து உள்ளார். இதனிடையே, இன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.