"திமுக ஆட்சியை தவறாக பேசினால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்"- பெண் கவுன்சிலர் ஆவேசம்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பேரணாம்பட்டு நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் இன்று (ஆக.28) நடைபெற்றது. 21 வார்டுகள் கொண்ட நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் 8வது வார்டு கவுன்சிலர், முஜம்மில் அஹ்மத் சுமார் 19 லட்சத்தில் பேப்பர் மற்றும் ஸ்டேஷனரி பொருள் வாங்கியதாகப் போலியாகப் பண மோசடி நடந்துள்ளதாகவும், இந்த மோசடியில் நகராட்சி ஆணையர் இந்த தவறை செய்துள்ளதாகவும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனை நகராட்சி தலைவர் கண்டு கொள்ளாதது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி பற்றி தவறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8வது வார்டு கவுன்சிலருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது 10வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் திமுக ஆட்சி பற்றி தவறாகப் பேசினால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என்று ஆவேசமாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பேரணாம்பட்டு நகராட்சி மன்ற கூட்டத் தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.