பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய திமுகவினர்! - coimbatore news
🎬 Watch Now: Feature Video
Published : Jan 14, 2024, 7:38 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழைய சர்க்கார்பதி என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தி.மு.க விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு, பெண்கள் மோட்டார் கிளப் தலைவர் நிவேதா ஜெசிகா ஏற்பாட்டில் இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மலைவாழ் மக்களுக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து நிவேதா ஜெசிகா கூறுகையில், “மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த நான்கு வருடங்களாக பொள்ளாச்சியில் உள்ள மலைவாழ் மக்களுடன் பொங்கல் தின விழாவைக் கொண்டாடி வருகிறோம். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உறியடி, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடனம் ஆகியவை நடைபெற்றது.
இங்குள்ள மலைவாழ் மக்கள், எங்களுடன் பொங்கல் கொண்டாடுவதால் மகிழ்ச்சியாக உள்ளனர். அதேபோல், இது போன்ற நிக்ழ்சி எங்களுக்கும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது” என்றார். இந்நிகழ்ச்சியில் புதூர் பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி ரவிச்சந்திரன், சிறப்பு விருந்தினர்களாக வாசிம் ராஜா, கார்த்திகா, வார்டு உறுப்பினர் காஜாமைதீன், மோட்டார் கிளப் துணைத் தலைவர் அனுஜா, செக்ரட்டரி தீபிகா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.