74th republic day: தருமபுரி மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை! - Dharmapuri District Collector hoisted the flag
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: நாட்டின் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறை அணிவகுப்பைப் பார்வையிட்டு மரியாதையைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு, முதலமைச்சர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் கரானா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத் துறை, சுகாதாரத்துறை, காவல் துறை பணியாளர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.81.96 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.