சென்னை: ஒரு திரைப்படத்திற்கு பெயர் என்பது அப்படத்திற்கான முகவரி போன்றது. ரசிகர்களை ஈர்க்கக்கூடிய பெயரை வைக்க அனைவரும் கஷ்டப்பட்டு யோசித்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். படத்தின் பெயர் கொஞ்சம் சுமராக இருந்தாலும் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டுவிடும். எனவே அதில் மிக கவனம் செலுத்தி வருகின்றனர் திரைத்துறையினர்.
ஒரே படத்தின் பெயரை இரண்டு படக்குழுவினர் அவரவர் படங்களுக்கு சூட்டுவது பின்பு சமரசம் மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல. அப்படி தற்போது புதிதாக ஒரே தலைப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் ஆண்டனியும் போட்டி போடுகிறார்கள். 73 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பராசக்தி படத்தின் தலைப்புக்கு தான் இந்த போட்டி.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மோகன் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் நேற்று மாலை வெளியானது. படத்திற்கு ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
#PARASAKTHI pic.twitter.com/mwbmg1V74P
— DawnPictures (@DawnPicturesOff) January 29, 2025
இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25வது படம். அத்துடன் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100வது படமாகும் . நேற்று மாலை டீசர் வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்ததிலிருந்து, படத்தின் தலைப்பு ’பராசக்தி’ தான் என இணையத்தில் தகவல் வெளியானது. அதற்கு சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் கண்டனங்களும் தெரிவித்தது.
ஆனால் நேற்று (ஜன.29) மாலை இந்த டீசர் வெளியாவதற்கு முன்பு காலை 11 மணியளவில் விஜய் ஆண்டனி தனது 25வது படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அந்த படத்திற்கு தமிழில் ’சக்தித் திருமகன்’ என்றும், தெலுங்கில் ’பராசக்தி’ என்றும் தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்திருந்தனர். ’அருவி’, ’வாழ்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.
— vijayantony (@vijayantony) January 29, 2025
தமிழில் ஒரு பெயர், தெலுங்கில் ஒரு பெயர் ஏன் இப்படி குழப்ப வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் ஆண்டனிக்கு சோதனையாக நேற்று மாலை சிவகார்த்தியேனின் பராசக்தி அறிவிப்பு டீசர் வெளியானதும் இந்த பிரச்சனை மேலும் பெரிதானது. ஏனென்றால் இந்த படமும் தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது. அதன் தலைப்பும் ’பராசக்தி’ தான். எனவே தலைப்பின் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில், ’பராசக்தி’ தெலுங்கு தலைப்பு உரிமையை கடந்த வருடம் ஜூலை மாதமே தென்னிந்திய ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்த ஆதாரத்தை பகிர்ந்திருந்தார். மேலும் ஆங்கிலத்தில் Paraashakthi என்ற வார்த்தையில் AA இருக்கிறது. சிவகார்த்திகேன் படத்தலைப்பில் PARASAKTHI என குறிப்பிடப்பட்டுள்ளது.
Here's the ensemble that will set the screens on fire in #Parasakthi 🔥🎥
— DawnPictures (@DawnPicturesOff) January 29, 2025
பராசக்தி(தீ) பரவ ஆரம்பித்தது ✊🏻
Telugu Teaser Link 🔗 https://t.co/EDL9piyenv
Tamil Teaser Link 🔗 https://t.co/DM8za1QWDI@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash… pic.twitter.com/7ROJiJ6486
இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் ’பராசக்தி’ டைட்டிலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. பழைய தமிழ் படங்களின் தலைப்பை மீண்டும் இப்போது பயன்படுத்துவது முன்பிலிருந்தே ட்ரெண்டில் இருந்து வந்தாலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னவாக இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: ”மிஷ்கின் பேசிய போது சிரிக்கத்தானே செய்தீர்கள்”... மிஷ்கினுக்கு ஆதரவாக வந்த சமுத்திரக்கனி
73 ஆண்டுகளுக்கு முன்பு 1952-ஆம் ஆண்டு வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி வசனத்தில், சிவாஜி அறிமுகமானார். அப்போதிருந்த வறுமை, மூடநம்பிக்கைகள் போன்ற சமூக அவலங்களை மையக்கதையாக கொண்டு பராசக்தி திரைப்படம் கடுமையாக விமர்சித்திருந்தது.
முன்னதாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. படத்தின் அப்போதைய தலைப்பு ’புறநானூறு’. பின்னர் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தற்போது ’பராசக்தி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.