Hogenakkal falls: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி! - கபினி அணை
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் தொடர் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வந்தன. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுவை வந்தடைந்தது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக நீர்வரத்து சுமார் 20,000 கன அடி வரை அதிகரித்தது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையையும், குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் விலக்கி குளிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குளித்தும், பரிசலில் பயணம் செய்து இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர்.