திருத்தணியில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா விழாக்கோலம் - ஏராளமான பக்தர்கள் பரணி காவடி எடுத்து தரிசனம்!

By

Published : Aug 8, 2023, 3:17 PM IST

thumbnail

திருவள்ளூர்: முருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பெற்ற ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நேற்று (ஆகஸ்ட் 7)  ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. 

ஐந்து நாட்கள் நடைபெற உள்ள விழாவில் இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 8) ஆடி பரணியையொட்டி மலைக் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் நீராடி, காவடிகளுக்கு பூஜைகள் செய்து மலையடிவாரத்திலிருந்து திருப்படிகள் வழியாக காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்து வருகின்றனர். பஜனைக் குழுக்கள், முருகன் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டும் உற்சாகத்துடன் நடனமாடி மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து காவடிகள் செலுத்தி முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். 

மாட வீதியில் காவடி ஓசைகளும், அரோகரா முழக்கங்களுடன் மலைக் கோயில் கோலாகலம் பூண்டு காணப்படுகின்றது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.