விஜயதசமியை முன்னிட்டு கோவையில் கத்தி போடும் திருவிழா! - coimbatore news
🎬 Watch Now: Feature Video
Published : Oct 24, 2023, 10:01 AM IST
கோயம்புத்தூர்: தற்போது நாடு முழுவதும் நவராத்திரியை முன்னிட்டு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி 10ஆம் நாளில், அம்மனை அழைப்பதற்காக கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், சாய்பாபா காலனியில் உள்ள விநாயகர் கோயிலில், இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் "வேசுக்கோ... தீசுக்கோ" என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தி போட்டு உடலில் ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனை அழைத்தனர்.
இதனால் பக்தர்களின் உடலில் இருந்து ரத்தம் வழிந்து ஓடியது. மேலும், அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக் கொண்டே சென்றனர். இந்த பொடியால் பக்தர்கள் உடலில் உள்ள காயங்கள் 3 நாட்களில் சரியாகும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெறும். மேலும் இவ்விழாவை முன்னிட்டு, ஊர்வலம் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.