ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா தனது காலில் காயத்துடன் ’சாவா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட மொழியில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு மொழியில் ’கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் 'டியர் கொம்ராட்' படத்தில் நடித்து பிரபலமானார்.
இதனைத்தொடர்ந்து தெலுங்கில் புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். மேலும் தமிழில் விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்தார். தென்னிந்தியா அளவில் பெரிய நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது பாலிவுட்டில் நடிகர் விக்கி கௌஷலுடன் சாவா (Chhaava) படத்தில் நடித்துள்ளார்.
மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா maharani yesubai கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாவா படத்தில் ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிகந்தர் (Sikandar) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ராஷ்மிகா காயத்திலிருந்து குணமடைந்த பிறகு சிகந்தர் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சாவா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ராஷ்மிகா தனது காலில் காயத்துடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் காமெடியில் கலக்கிய சந்தானம்... வசூலை வாரிக் குவிக்கும் ’மதகஜராஜா’! - MADHA GAJA RAJA COLLECTIONS
ராஷ்மிகா மந்தனா சாவா, சிகந்தர் ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தனுஷ், நாகார்ஜுனா ஆகியோருடன் 'குபேரா' படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகர் விஷால் மதகஜராஜா திரைப்பட நிகழ்ச்சியில் கடும் காய்ச்சலுடன் பங்கேற்றது பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.