300 ஆண்டுகளாக தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள் - திண்டுக்கல் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகேவுள்ள இடையகோட்டை - வலையப்பட்டியில் குரும்பரின மக்கள் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்திலிருந்து, சுமார் 300 ஆண்டுகளாக கோயில் திருவிழாவில் தொடர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இடையகோட்டை அருகே உள்ள வலையபட்டியில் குரும்பரின மக்களுக்குச் சொந்தமான மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு பிரார்த்தனைகள் நடந்தவுடன் வருடாவருடம் மஹா சிவராத்திரிக்கு மறுநாளில் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்செலுத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடைபெற்ற நான்கு நாள் திருவிழாவில் 50க்கு மேற்பட்டோருக்கு கோயில் பூசாரி பூச்சப்பன் பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
இந்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கரூர், பொள்ளாச்சி, மதுரை, கோயம்புத்தூர், உடுமலை, மற்றும் பல்வேறு மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகியப் பகுதிகளிலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் அற்புதமான அனுபவம்-குடியரசுத் தலைவர்