video:புழுதி பறக்க சமத்துவப் பொங்கலை தெறிக்கவிட்ட கல்லூரி மாணவிகள் - தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு
🎬 Watch Now: Feature Video
வேலூர்: அருகே சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இன்று (ஜன்.13) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொங்கலிட்டு படையல் இடப்பட்ட பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி ஆடி உறியடித்தனர். மேலும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் சுற்றி மாணவிகள் காற்றைக் கிழித்தனர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு உட்பட சினிமா பாடல்களுக்கும் கல்லூரி மாணவிகள் ஓயாத நடனம் ஆடி தெறிக்கவிட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.