ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் - Thoothukudi
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி கரை அருகே ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இந்த ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான முதல்கட்டப் பணியாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்தது.
இதில், பழங்கால மனிதனின் வாழ்வியலை பறைசாற்றும் வண்ணம் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதனை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் இன்று திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி கிறிஸ்டோபர் பெண்கள் கலைக்கல்லூரி மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவிகள் 40 பேர், ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட வருகை தந்தனர்.
அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி ஆகியோர் ஆய்வுப்பணிகள் குறித்தும், அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.