Coimbatore: வால்பாறையில் வெளுத்து வாங்கும் மழை - 2ஆவது நாளாக பள்ளி,கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை - சென்னை வானிலை ஆய்வு மையம்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதியில் இருக்கும் வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக கூலாங்கல் ஆறு, பிர்லா நீர் வீழ்ச்சி, சின்னக்கல்லார், அப்பர் நீரார், லோயர் நீரார், சோலையார் அணை, காடம்பாறை அணைப் பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர் மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஆற்றின் ஓரம் வசிக்கும் பொது மக்களுக்கு வால்பாறை நகராட்சி சார்பில் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை ஓரம் உள்ள மரங்கள் விழுந்தால் போர்க் கால அடிப்படையில் அகற்ற நெஞ்சாலைத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த நூறு பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து தயார் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக விடுமுறையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி அணை பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கோவை கட்டட விபத்து: இருவர் கைது - நிவாரணம் வழங்க ஏற்பாடு