குடிநீர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி.. செங்குன்றத்தில் வாடிக்கையாளர் அதிர்ச்சி - food safety officers
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் கரிக்கோல்ராஜ் என்பவர் அங்கிருந்த கடை ஒன்றில் 20 ரூபாய் கொடுத்து அடைக்கப்பட்ட பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்க முயன்றுள்ளார். அப்போது தனியார் நிறுவனத்தின் பெயர் கொண்டு அடைக்கப்பட்ட அந்த பாட்டில் குடிநீரில், கரப்பான் பூச்சி ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கரிக்கோல்ராஜ் கூறுகையில், "தாகத்திற்காக அருகில் உள்ள ஒரு கடையில் 20 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கினேன். அதை குடிக்க முயன்றபோது அதில் பூச்சி ஒன்று மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த பாட்டில் மூடி கூட திறக்கப்படவில்லை" என தெரிவித்தார்.
பின்னர், இது தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மக்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது கரப்பான் பூச்சி இறந்த நிலையில் குடிநீர் பாட்டிலில் மிதக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.