7 அடி நீளம் - மாடி படியில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு - போராடி மீட்ட வனத்துறை
🎬 Watch Now: Feature Video
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் படிக்கட்டில் நேற்று ( ஏப்ரல்.04 ) நள்ளிரவு ஒரு மணி அளவில் நல்ல பாம்பு இரண்டு அடி உயரத்திற்குப் படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தது. அதனை பக்கத்து வீட்டைச்சேர்ந்தவர்கள் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, உடனடியாக 101 என்ற தொலைத் தொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டு தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அந்த நல்ல பாம்பு தொடர்ந்து படம் எடுத்து ஆடிக்கொண்டே இருந்தது. இதனை சசிகுமார் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களும் செய்வதறியாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
அதிகாலை 3 மணிக்கு பாம்பு பிடிப்பவர்கள் குழு வந்து பாம்பை ஆயுதத்தை பயன்படுத்திப் பிடித்தனர். அந்த நல்ல பாம்பு ஏழு அடி நீளமும், 15 ஆண்டுகள் வயதும் உடையதாக இருக்கும் என்று பாம்பை பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "சீறிப்பாயும் காளைகள்"... புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டி!
இதையும் படிங்க: சாத்தப்பட்ட நடை - நயன்தாராவுக்காக திறக்கப்பட்ட தாராசுரம் ஆலய பிரதானக்கதவு