கடத்தல் பொருளைப் பிடித்த பாதுகாப்புப் படை வீரர்களைத் தாக்கிய கிராம மக்கள்..! - கிராம மக்கள்
🎬 Watch Now: Feature Video
பிகார் மாநிலத்தில் ஆள் அரவமற்ற பகுதியில் அமைந்துள்ளது ஃபோர்பேஸ்கஞ்ச் தொகுதியின் குல்ஹானியா சந்தமோகன் கிராமம். இந்த பகுதியில் இருந்து நேபாலுக்கு கடத்த சுமார் 11 டன் கோதுமை ஏற்றிச் சென்ற டிராக்டரை பாதுகாப்புப் படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அருகிலிருந்த கிராம மக்கள் திடீரென பாதுகாப்புப் படை வீரர்களைத் தாக்கினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாகக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST