Actor Manobala : நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய மோகன், சங்கர் கணேஷ்! - Actor Manobala wife and son

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 3, 2023, 10:26 PM IST

Updated : May 3, 2023, 10:35 PM IST

சென்னை : தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் அவர் கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

1982ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா, 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி உள்ளார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' படம் மூலம் உதவி இயக்குநராக தன் பயணத்தைத் தொடங்கிய மனோபாலா பின்னாட்களில் குடும்பப் படங்களையும், ஜனரஞ்சகமான காதல் படங்களையும் வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர்கள் விஜய், மோகன், நட்ராஜ், இயக்குநர்கள் பி.வாசு, சேரன், எல்.விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  

வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் மனோபாலாவின் இறுதி அஞ்சலி நடைபெறும் என அவரது மகன் ஹரிஷ் மனோபாலா தெரிவித்து உள்ளார்.

Last Updated : May 3, 2023, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.