Chandrayaan-3 Bed sheet: சந்திரயான்-3 வெற்றியைப் பாராட்டி சென்னிமலை நெசவாளி பெட் ஷீட் தயாரிப்பு!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 2, 2023, 10:34 AM IST
ஈரோடு: சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும், சென்னிமலை கைத்தறி வடிவமைப்பாளர் சந்திரயான்-3 விண்கலத்தை பெட்ஷீடில் நெசவு செய்து அசத்தி உள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை 'சென்டெக்ஸ்' கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஜக்காடு துணி மற்றும் பெட் ஷீட் வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் அப்புசாமி (வயது 48).
இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் இறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாகவும், விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், சந்திராயன் 3 விண்கலம் மற்றும் நிலவு படங்களை பெட்ஷீட்டில் வடிவமைத்து உருவாக்கி உள்ளார். பெட் ஷீட்களை உருவாக்க, 2க்கு 17 என்கிற பருத்தி முறுக்கு நுாலை கொண்டு, 400 ஊக்ஸ் கொண்ட ஜக்கார்டு தறியில் ஒரு வாரம் நெசவு செய்துள்ளார்.
60 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட சந்திராயன்-3 விண்கலம் பெட்ஷீட்டை இஸ்ரோ நிறுவனத்திற்கும், தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேலுவுக்கும் வழங்க உள்ளதாக வடிவமைப்பாளர் அப்புசாமி தெரிவித்தார். மேலும், கைத்தறி வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ள சந்திராயன் 3 விண்கல பெட்சீட்டை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.