புகழ்பெற்ற இலங்கை நல்லூர் கந்தசாமி கோயிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சாமி தரிசனம்! - இலங்கை நல்லூர் முருகன் கோயில்
🎬 Watch Now: Feature Video


Published : Nov 3, 2023, 7:51 PM IST
நல்லூர்(இலங்கை): இலங்கையில் உள்ள புகழ் பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் இளைஞர்களுடன் அவர் சிறிது நேரம் கலந்துரையாடியதோடு அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இலங்கையில் நடைபெற்ற 'நாம் 200 மாநாடு' இந்தியா - இலங்கை இடையேயான பொருளாதார உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றிருந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றார்.
அந்த வகையில் இன்று (நவ.3) இலங்கையில் உள்ள புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வின் போது, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை வெளியுறவு அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெய ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் சிவபாலசுந்தரன் மற்றும் மாநகர மேயர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.