தருமபுரியில் பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளி பெண்ணைத் தாக்கும் சிசிடிவி காட்சி வைரல்! - பாலக்கோடு
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்டம், தீர்த்தகிரி நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவிந்தம்மாள் (22) பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
மேலும், இவர் பணியில் இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ரூ.300க்கு பெட்ரோல் போட சொல்லி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் பெட்ரோல் போட்டதும், ரூ.150யை திருப்பி கேட்டு உள்ளனர்.
அந்த பெண் 300 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டு விட்டேன் எனக் கூற, நான் ரூ.150க்கு தான் பெட்ரோல் போட சொன்னேன், எனவே மீதி பணத்தை திருப்பி தருமாறு, தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி உள்ளார். மேலும், வாடிக்கையாளர் பைக்கை விட்டு இறங்கி மாற்றுத்திறனாளி பெண்ணை, சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்று உள்ளார்.
இதனால், பலத்த காயமடைந்த பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் ஊழியரைத் தாக்கிய மர்ம நபர்கள் குறித்து சி.சி.டி.வி.காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பெண் ஊழியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.