High Jump செய்த காளை - ஆச்சரியத்தில் மக்கள்! - காளை வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: விராலிமலை அடுத்த ஆலத்தூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், 737 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இதில், சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட காளைகளை காளையர்கள் தழுவ முடியாமல் தவித்ததும் சில காளைகளை காளையர்கள் தழுவியதும் நடைபெற்ற நிகழ்வுக்கு மத்தியில் வாடிவாசலிருந்து வெளியேறிய காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து, அங்கு வரிசையாக நின்றிருந்த கூட்டத்தினரை பார்த்து மிரண்டது. பின், உடனடியாக அந்த காளை பின்னோக்கி சென்றது.
அப்போது, திடீரென என்ன நினைத்ததோ கூட்டத்திற்குள் இருக்கும் பார்வையாளர்களை எந்தவித தொந்தரவும் செய்யாமல் ஒரே ஜம்பாக சுமார் 50 அடிக்கு மேலாக தாவிச் சென்றது. இதை அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவ்வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு செல்லவிருந்த இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழப்பு