மணமேடையில் தான் வளர்த்த காளையை அறிமுகப்படுத்திய மணப்பெண்! - மணமேடையில் ஜல்லிக்கட்டை அறிமுகப்படுத்திய பெண்
🎬 Watch Now: Feature Video
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுகப்பிரியா. இவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நேற்று (மே 23) திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
மணப்பெண் சுகப்பிரியா தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்லும்போதும் தன்னுடன் ஜல்லிக்கட்டு காளையை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், இந்த திருமணத்தில் மணப்பெண்ணான சுகப்பிரியா, தனது வீட்டில் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக மணமேடையிலேயே ஜல்லிக்கட்டு காளையை ஏற்றி, காளைக்கு முத்தமிட்டு மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்ததோடு, காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது உறவினர்களுக்கும் மணமகள் சுகப்பிரியா ஜல்லிக்கட்டு காளையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.