Bellie and Bomman: ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளி கையால் விருது பெற்ற பள்ளி மாணவர்கள்! - Bomman Bellie couple bring the prize of student

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 7, 2023, 9:30 AM IST

திண்டுக்கல்: பழனியில் தனியார் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். 

அதில் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்குப் பிறகு பிரபலமான பொம்மன், பெள்ளி தம்பதிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஒட்டுமொத்தமாக அனைத்து நிகழ்ச்சியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியினர் கைகளால் விருது வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பொம்மன், பெள்ளியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.கடந்த சனிக்கிழமையன்று முதுமலையில் பொம்மன் - பெள்ளி தம்பதியை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் சென்று சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.