ஆந்திராவில் நடந்த விசித்திரம்: மீன் பிடிக்கும் போது மூக்கு துவாரத்தில் சிக்கிய இறால்..அடுத்து நடந்தது என்ன? - மீன் பிடிக்கும் போது மூக்கு துவாரத்தில் சிக்கிய இறால்
🎬 Watch Now: Feature Video
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென அவரின் மூக்கு துவாரத்தில் இறால் மீன் சிக்கியது. மூச்சு விட முடியாமல் தவித்த அவரை மீட்டு உடனிருந்தவர்கள் பீமாவரத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். மருத்துவர் ராமகிருஷ்ணா தலைமையிலான மருத்துவர்கள் குழு அவரை பரிசோதித்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் இறாலை அகற்றினார். இதுகுறித்த செய்தி அறிந்த பலர், வியப்படைந்தனர். மேலும், அவர் உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று கூறுகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST